Tamil Cooking recipe for Parotta
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்
- மைதா மாவு - 1 கிலோ
- முட்டை - 5
- பால் - 2 கப்
- தண்ணீர் - 2 கப்
- பேக்கிங் பவுடர் -4 மேஜைகரண்டி
- நெய் - 5 மேஜைகரண்டி
- எண்ணெய் -1 /2 கப்
- சக்கரை - 5 மேஜைகரண்டி
- உப்பு - தேவையான அளவு
- முட்டை உடைத்து நன்கு அடித்து வைத்து கொள்ளவும்
- ஒரு பாத்திரத்தில் மைதா சேர்த்து அதில் பால் சக்கரை, உப்பு பேக் கிங் பவுடர் அடித்த முட்டை தண்ணீர் சேர்த்து மாவில் கலந்து பிசையவும்
- பிசைந்த மாவு கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும்
- மாவை நன்கு ஈரத்துணியால் முடி 1 மணி நேரம் ஊறவைகவும்
- பிறகு மாவை எடுத்து சிறு உருண்டை செய்து நெய் எண்ணெய் தடவி நன்றாக உருட்டி 3 மணி நேரம் ஈரத்துணியால் ஊறவைகவும்
- பின் அதை எடுத்து சப்பாத்தி தேய்ப்பது போல் மெலிதாக தேய்த்து அதில் எண்ணெய் தடவி விசுறி மடிப்பது போல் முன்னும் பின்னும் மடித்து சுருட்டி வைக்கவும்
- பின்சுருட்டிய உருண்டையை சப்பாத்தி கட்டையால் தேய்த்து தோசைகல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி சிவந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்