சேமியா கிச்சடி

Tamil Cooking recipe for Semiya Kitchadi


தேவையான பொருட்கள் 
  1. சேமியா  -1  கப்
  2. பட்டை -1
  3. கிராம்பு -1
  4. ஏலக்காய் -1
  5. வெங்காயம் -1
  6. தக்காளி -1
  7. கேரட் -1
  8. பீன்ஸ் -5
  9. பச்சை பட்டாணி -1 /2 கப் 
  10. இஞ்சி பூண்டு விழுது -1ஸ்பூன்
  11. பச்சைமிளகாய் -2
  12. மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
  13. கரம் மசாலா -1ஸ்பூன்
  14. உப்பு -தேவையான அளவு
  15. தண்ணீர் -11/2கப்
  16. நெய் 1ஸ்பூன்
  17. கொத்தமல்லி இலை -சிறிது
செய்முறை 
  • காய்கறி நீளவாக்கில் நறுக்கவும்..
  • வாணலியில் நெய் சேர்த்து  சேமியாவை வறுத்துக்கொள்ளவும்.
  • வாணலியில் நெய்  ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வெங்காயம்,மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு விழுது போட்டு 4 நிமிடம்  பச்சவாட  போக வதக்கி தக்காளி சேர்க்கவும்.
  • காய்கறி போட்டு நன்கு வதக்கவும். மஞ்சள்தூள்,  கரம் மசாலா சேர்த்து வதக்கி தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.
  • காய்கறி  வெந்தவுடன் 11/2கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
  • தண்ணீர் கொதித்தவுடன் சேமியாவை போட்டு கிளறி வேகவிடவும். சேமியா வெந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
மேலும்: ரவை கிச்சடி
Related Posts with Thumbnails