மசால் தோசை

Cooking recipe for masal Dosa 
தேவையான பொருட்கள்
  1. தோசை மாவு- 1 கப் 
  2. உருளைக்கிழங்கு - 4
  3. வெங்காயம் - 2(நீட்டமாக வெட்டவும் )
  4. பச்சை மிளகாய் - 4
  5. மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
  6. கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
  7. கடுகு - 2 டீஸ்பூன்
  8. இஞ்சி -1 துண்டு 
  9. உளுத்தம் பருப்பு -2 டீஸ்பூன்
  10. கறிவேப்பிலை - ஒரு கொத்து
  11. எண்ணெய் -  5 டேபிள் ஸ்பூன்
  12. உப்பு - தேவையான அளவு 
செய்முறை 

  • உருளைக்கிழங்கை வேக வைத்து,  தோல் நீக்கி மசித்து வைத்து  கொள்ள வேண்டும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பையும் கறிவேப்பிலை போட்டு  பொரிக்க வேண்டும் 
  • பிறகு வெங்காயம்,   சேர்த்து வதக்கி இஞ்சி , பச்சை மிளகாயை இரண்டாக கீறி  போட்டு அத்துடன் மஞ்சள் தூள், உப்பு,     சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வதங்கியவுடன்  மசித்து  வைத்துள்ள உருளைக்கிழங்கைப் போட்டு கிண்ட   வேண்டும் 
  • பிறகு தோசை மாவை கல்லில்  ஊற்றி, எண்ணெய்  ஊற்றி,      செய்து வைத்துள்ள மசாலாவை ஒரு டேபிள் ஸ்பூன் அளவு நடுவில் வைத்து தோசையை மூடி எடுக்கவும் 
Related Posts with Thumbnails